விவாகரத்து பெறுவதாக, தேசிய இளைஞர் படையின் பணிப்பாளர் காமினி விக்ரமபால கூறுகிறார்.
அத்துடன், இந்நாட்டு இளைஞர் சமுதாய மத்தியில் பரவிவரும் போதைப்பொருள் வலையமைப்பு, ஒரு "நீராளியைப்" போலச் செயற்பட்டு, இளம் தலைமுறையைப் பலியெடுத்து, "ஐஸ்" தொழிற்சாலைகள் வரை வளர்ச்சியடைந்து வருகின்றமை, எமது மரபுரிமைக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
மாத்தளையில் நடைபெற்ற இளைஞர் முகாம் ஒன்றில் இவ்வாறு கருத்துத் தெரிவித்த பணிப்பாளர், அரசியல் பேதங்கள் இன்றி சரியான வழிகாட்டுதலை வழங்க தேசிய இளைஞர் சேனா படை தயாராக இருப்பதாகவும் கூறினார்.
"இந்தப் பயணத்தை சரியாக மேற்கொள்ளாவிட்டால், நாடு மாத்திரமன்றி நீங்களும், உங்கள் குடும்பமும், சமூகமும் பாரதூரமான, சோகமான அழிவைச் சந்திப்பீர்கள் என்பதை மறக்க வேண்டாம்" என அவர் இளைஞர் சமுதாயத்திடம் வலியுறுத்தினார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இளைஞர் சமுதாயத்தை வலுவூட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு பூராகவும் உள்ள அனைத்து இளைஞர் யுவதிகளையும் சந்தித்து சரியான வழிகாட்டலை வழங்க இளைஞர் சேனா படை தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டை நேசிக்கும், ஒழுக்கமும் ஆளுமையும் நிறைந்த தேசபக்தர்களை உருவாக்குவதே தமது நோக்கம் எனவும் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
16-28 வயதுக்கு இடைப்பட்ட, 5.8 மில்லியன் அளவிலான இந்நாட்டின் இளைஞர் சக்தியை, எதிர்கால நாடு கோரும் ஆற்றல்மிக்க ஒரு குழுவாக மாற்றுவதே இளைஞர் சேனா படையின் பிரதான நோக்கமாகும்.
மாத்தளை மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 250 இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலுடன் நாவலை இளைஞர் சேனா படை நிலையத்தில் நடைபெற்ற இரண்டு நாள் (ஒக்டோபர் 18-19) இளைஞர் முகாமிலேயே பணிப்பாளர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேனா படையின் மத்திய மாகாணப் பணிப்பாளர் உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


