1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறிய நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் இன்று என்மீது  குற்றம் சுமத்துகின்றனர் இந்த  குற்றச்சாட்டுகளை மறுப்பதாக ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகல் கிரிபாவவில் நேற்று (06) நடைபெற்ற 'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜனாதிபதி கருத்து தெரிவித்தார்.

'' நான் தோல்வியடைந்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். நான் தோல்வியடையவில்லை. நான் நாட்டிற்காக 20 ஆண்டுகள் பணியாற்றினேன். பாதுகாப்பு செயலாளராக போரை முடித்தேன். எனக்கு சிறப்பு பட்டம் கிடைத்தது இப்போது போனஸாக ஜனாதிபதியாக இருக்கின்றேன் அந்த வகையில் நான் பாஸாகி  வந்திருக்கின்கிறேன், ”என்று ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான 'கிராமத்துடனான உரையாடல்' நிகழ்ச்சியின் 13 வது கட்டம் குருநாகலையில் உள்ள கிரிபாவ வெரகல பகுதியில் நேற்று நடைபெற்றது.

'ஒப்பந்தம் இல்லை, மறைக்க தேவையில்லை'

மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மறைக்க தனது அரசாங்கத்திற்கு எந்தவித தே​வையும் இல்லை என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக எந்தவொரு நபருடனோ அல்லது கட்சியுடனோ எந்தவித ஒப்பந்தம் செய்ய மாட்டேன் என்றும் யாரையும் மகிழ்விக்க நான் விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு தேசிய பிரச்சினை என்றும் அதை ஒரு அரசியல் கருப்பொருளாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறிய ஜனாதிபதி, இந்தத் துயரத்திலிருந்து தகுந்த முறையில் செயல்படுவது தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களின் பொறுப்பாகும் என்று கூறினார்.

"கார்டினலின் வலி நியாயமானது"

"தாக்குதல் குறித்து கார்டினலின் வலி நியாயமானது. அவர் அதைப் பற்றி பேசுவது சரியானது என்று ஜனாதிபதி கூறினார், ஆனால் " தாக்குதல் நேரத்தில் அமைதியாக இருந்து விட்டு அப்போதைய அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் இப்போது கறுப்புக் கொடிகளை உயர்த்துவது வருத்தமாகவும் கேலிக்குரியதாகவும் உள்ளது" என்றார்.

“'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019 ல் முந்தைய அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது நடந்தது. அப்போதைய அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் ஏமாற்றமடைந்த மக்கள், கூட்டுறவு யூனியன் தேர்தல்களிலும், பெப்ரவரி 2018 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களிலும் அரசாங்கத்திற்கு தங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ”வெற்றி அணிவகுப்பு நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியது என்று ஜனாதிபதி கூறினார்.

'உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் நான் ஆட்சிக்கு வரவில்லை'

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சுட்டிக்காட்டி நான் ஆட்சிக்கு வரவில்லை என்று ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.

முந்தைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளித்ததை  சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 2015 ல் ஆட்சிக்கு வந்தவர்கள் தேசிய பாதுகாப்பு குறித்து மறந்துவிட்டதாக கூறினார்.

அனைத்து மனித உரிமை குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், 2015 க்கு முந்தைய பாதுகாப்பு கொள்கை மீண்டும் செயல்படுத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

"தமிழ் பயங்கரவாதத்துக்கோ அல்லது இஸ்லாமிய தீவிரவாதத்துக்கோ இடமில்லை."

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அரசாங்கமே பொறுப்பு என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, தமிழ் பிரிவினைவாதத்தினூடாக பயங்கரவாதத்துக்கோ அல்லது இஸ்லாமிய தீவிரவாதத்துக்கோ இடமில்லை என்று கூறியதோடு, ஆதாரமற்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி