Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்க: முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 22½ ஆண்டுகள் சிறை!

T

The Leader Desk

ஜூன் 27, 2021 • 10:29 AM

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்க: முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 22½ ஆண்டுகள் சிறை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியா பொலிஸ் நகரை சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட்.
  • லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந் தேதி மினியா பொலிஸ் நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார்.‌ அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500) கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.
  • அதன் பேரில் பொலிஸ் அதிகாரி டெரெக் சாவின் தலைமையில் 4பொலிசார் அங்கு விரைந்தனர்.‌ பின்னர் அவர்கள் புகார் தொடர்பாக விசாரிக்க அழைத்த போது ஜார்ஜ் பிளாய்ட் பொலிஸ் வாகனத்தில் ஏற மறுத்ததாக தெரிகிறது.
  • இதையடுத்து டெரெக் சாவின் உள்பட 4பொலிசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
எழுத்து அளவு:

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியா பொலிஸ் நகரை சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந் தேதி மினியா பொலிஸ் நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார்.‌

அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500) கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் பொலிஸ் அதிகாரி டெரெக் சாவின் தலைமையில் 4பொலிசார் அங்கு விரைந்தனர்.‌ பின்னர் அவர்கள் புகார் தொடர்பாக விசாரிக்க அழைத்த போது ஜார்ஜ் பிளாய்ட் பொலிஸ் வாகனத்தில் ஏற மறுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து பொலிஸ் அதிகாரி டெரெக் சாவின் ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார். ‘‘என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள்’’ என ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சிய போதும் விடவில்லை. சிறிது நேரத்தில் பிளாய்ட் உயிரிழந்தார். ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணம் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதையும் உலுக்கியது.

இனவெறிக்கு எதிராகவும் பொலிசாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து டெரெக் சாவின் உள்பட 4பொலிசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரெக் சாவின் மீது இரண்டாம் நிலை படுகொலை, மூன்றாம் நிலை படுகொலை மற்றும் மனித உயிர் இழப்பை ஏற்படுத்தியது ஆகிய 3 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து டெரெக் சாவின் மீதான வழக்கு விசாரணை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வழக்கு விசாரணையை எதிர்கொண்ட டெரெக் சாவின் ஏப்ரல் மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த 12 நீதிபதிகளை கொண்ட அமர்வு டெரெக் சாவினுக்கான தண்டனை விவரங்களை நேற்று முன்தினம் அறிவித்தது.

அதன்படி ஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்த குற்றத்துக்காக டெரெக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

டெரெக் சாவினுக்கான இந்த தண்டனை நம்பிக்கை மற்றும் அதிகாரத்தின் ஒரு நிலையை துஷ்பிரயோகம் செய்ததன் அடிப்படையிலும், ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு காட்டப்பட்ட குறிப்பிட்ட கொடூரத்தின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது என நீதிபதிகள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்த பின்னர் கோர்ட்டில் பேசிய டெரெக் சாவின், ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்தார். அதே சமயம் அவர் மன்னிப்பு கோரவில்லை.

ஜார்ஜ் பிளாய்ட்டின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

அதேபோல் ஜனாதிபதி ஜோ பைடன், ‘‘டெரெக் சாவினுக்கான இந்த தண்டனை பொருத்தமானதாக தெரிகிறது’’ என கூறி தீர்ப்பை வரவேற்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்க: முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 22½ ஆண்டுகள் சிறை! | Tamil Leader | We Lead the Nation