Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

“67,000 மெ.தொ அரிசி இறக்குமதி; ரூ. 4.3 பில். வரி வருமானம்”

T

The Leader Desk

டிசம்பர் 21, 2024 • 10:20 AM

“67,000 மெ.தொ அரிசி இறக்குமதி; ரூ. 4.3 பில். வரி வருமானம்”   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த 67,000 மெற்றிக் தொன் அரிசியில், 28,500 மெற்றிக் தொன் பச்சரிசியும் 38,500 மெற்றிக் தொன் நாட்டரிசியும் அடங்குவதாகவும், ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபாய் இறக்குமதி வரி அறவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
  • எவ்வாறாயினும், அடுத்த வருடம் ஜனவரி 10ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
  • இதேவேளை, அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

தனியார் இறக்குமதியாளர்கள் 67,000 மெற்றிக் தொன் அரிசியை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும், இதன் மூலம் இலங்கை சுங்கத்துறை, இறக்குமதி வரியாக 4.3 பில்லியன் ரூபாய் அல்லது 430 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், சுங்கப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.

இந்த 67,000 மெற்றிக் தொன் அரிசியில், 28,500 மெற்றிக் தொன் பச்சரிசியும் 38,500 மெற்றிக் தொன் நாட்டரிசியும் அடங்குவதாகவும், ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபாய் இறக்குமதி வரி அறவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அடுத்த வருடம் ஜனவரி 10ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, அரிசி இறக்குமதி தற்போது இடம்பெறுகிறதா என இலங்கை சுங்கத்திடம் வினவிய போது, “கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் வரை அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியாது” என சுங்கப் பணிப்பாளர் நாயகம் அருக்கொட தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

“67,000 மெ.தொ அரிசி இறக்குமதி; ரூ. 4.3 பில். வரி வருமானம்” | Tamil Leader | We Lead the Nation