Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

மிரிஹான முகாமுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள மியன்மார் அகதிகள்

T

The Leader Desk

டிசம்பர் 21, 2024 • 6:59 AM

மிரிஹான முகாமுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள மியன்மார் அகதிகள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், ஏனையோரை இன்றைய தினம் மிரிஹான முகாமுக்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
  • குறித்த படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
  • இவர்களில் கற்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும், அடங்குகின்றனர்.
  • மாலை 4.30 மணிக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன இதன் பின்னர் படகை செலுத்தி வந்த குற்றச்சாட்டில் 11 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், ஏனையோரை இன்றைய தினம் மிரிஹான முகாமுக்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் கற்பிணித் தாய் ஒருவர் உட்பட  39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும், அடங்குகின்றனர்.

இவர்களை நேற்று மாலை திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் விஜயம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டிருருந்தார்.

மாலை 4.30 மணிக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன இதன் பின்னர் படகை செலுத்தி வந்த குற்றச்சாட்டில் 11 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றைதினம் இவர்கள் மிரிஹானவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும், பொலிஸாரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை ஐ.நா பாராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் வாழ முடியாத சூழ்நிலையில் இலங்கைக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அந்து குடும்பத்தில் ஒருசிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் எட்டு இலட்சம் ரூபாய் வழங்கி படகினை கொள்வனவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா குறித்த நபர்களை பார்வையிட்டு அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக அரச அதிகாரிகளுடனும் பொலிஸாருடனும் கலந்துரையாடியிருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...