அமுலில் இருக்கும் என்று, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, பல ஆற்றுப் படுகைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன, நீர்வளவியல் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் சூரியபண்டார தெரிவித்தார்.
அதன்படி, பத்தேகம மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பத்தேகமவில் 172 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்துள்ளதாக அவர் கூறினார்.
களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் கிரிந்தி ஓயா ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதாக நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்தார்.
இதனால், களனி, களு, கிங், அத்தனகளு மற்றும் நில்வலா நதிப் படுகைகளில் மழைப்பொழிவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், அந்தப் பகுதிகளின் தாழ்வான பகுதிகளில் பேரிடர் நிலைமைகள் பதிவாகக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கிரிந்தி ஓயா மற்றும் லுணுகம்வெஹர நீர்த்தேக்கங்களுக்கு கணிசமான அளவு நீர் கிடைத்துள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


