Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கைக்கு அடுத்தடுத்து விழப்போகும் பேரிடிகள்!

T

The Leader Desk

அக்டோபர் 21, 2025 • 2:36 AM

இலங்கைக்கு அடுத்தடுத்து விழப்போகும் பேரிடிகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் துவண்டு, நிமிர முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் இலங்கைக்கு இது போதாத காலம் போலும்.
  • ஏற்கனவே எலுமிச்சம்பழம் விலை கிலோ 3,000 ரூபாவைத் தாண்டி விட்டது.
  • மழை வெள்ள நிலைமை மோசமடைந்த பின்னர் மரக்கறிகளின் விலை எக்கச்சக்கமாக எகிறும் ஆபத்து உள்ளது.
எழுத்து அளவு:

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் துவண்டு, நிமிர முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் இலங்கைக்கு இது போதாத காலம் போலும். அடுத்து மிக மோசமான காலநிலைப்பாதிப்பை இலங்கை எதிர்கொள்ள
இருப்பதாக வளிமண்டலவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பெருமளவில் தொடர் மழை இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறைந்தது ஆறு தாழமுக்கங்களை இலங்கை பிரதேசம் அடுத்த பெப்ரவரி
வரையில் எதிர்கொள்ளக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

அண்மைக் காலம் வரை வரட்சியை எதிர்கொண்ட நாடு இப்போது பெருமழையை எதிர்கொண்டு வருகின்றது.
ஏற்கனவே எலுமிச்சம்பழம் விலை கிலோ 3,000 ரூபாவைத் தாண்டி விட்டது.

மழை வெள்ள நிலைமை மோசமடைந்த பின்னர் மரக்கறிகளின் விலை எக்கச்சக்கமாக எகிறும் ஆபத்து உள்ளது. இப்போது பெய்கின்ற மழை விட்டுத்தராவிட்டால் இம்முறை வேளாண்மையும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு அரிசி இறக்குமதி மீண்டும் நெருக்கடியைத் தரும் விவகாரமாக மாறும்.

ஏற்கனவே வறட்சியால் தென்னைச் செய்கை மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. காலம் பிந்திய மழை உடனடி விளைச்சலுக்கு உதவப்போவதில்லை. அதனால் தேங்காய் தட்டுப்பாடும் அடுத்து வரும் வாரங்களில் ஏற்படும் சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்படப் போகும் காலைநிலை மாற்றம் தன் பங்குக்கு நாட்டுக்கு பெரும் நெருக்கடி கொடுத்துவிட்டுப் போகும்
என்றுதான் கருதப்படுகிறது. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீளுவது என்பது சிக்கலாகத்தான்
இருக்கப் போகின்றது.

  • காலை முரசு
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...