Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

பல அமைச்சுகளின் விடயப் பரப்புக்களும் பணிகளும் மாற்றம்!

T

The Leader Desk

அக்டோபர் 21, 2025 • 2:15 AM

பல அமைச்சுகளின் விடயப் பரப்புக்களும் பணிகளும் மாற்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
  • தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அண்மையில் இடம்பெற்ற திருத்தத்துடன், இந்த விடயப் பரப்புக்கள் திருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
எழுத்து அளவு:

திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அண்மையில் இடம்பெற்ற திருத்தத்துடன், இந்த விடயப் பரப்புக்கள் திருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த திருத்தங்களுக்கு அமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த சிவில் பாதுகாப்புத் திணைக்களமும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இருந்த புனர்வாழ்வுப் பணியகமும், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சுகாதார அமைச்சின் கீழ் இருந்த வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா திரிபோஷா கூட்டுத்தாபனம், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சிடமும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இருந்த வரையறுக்கப்பட்ட செலசினே மீடியா சொல்யூஷன்ஸ் தனியார் நிறுவனம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

சுற்றாடல் அமைச்சின் கீழ் இருந்த புவிச்சரிதவியல், அளவை மற்றும் சுரங்கப் பணியகம், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழும், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இருந்த கறுவா அபிவிருத்தித் திணைக்களம், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிசக்தி அமைச்சின் கீழ் உள்ள லங்கா விதுலிபல கமகே (Lanka Electricity Company), வரையறுக்கப்பட்ட லங்கா விதுலி தனியார் கம்பனி (Lanka Electricity Private Limited) என திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 4 புதிய நிறுவனங்களும் இந்த புதிய வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட அமைச்சுகளின் விடயப் பரப்புக்களும் இந்த புதிய வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...