அமைச்சர் விமல் வீரவன்சவை அமைச்சரவையில் இருந்து உடனடியாக வெளியேற்றுமாறு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மொட்டு கட்சியின் மூத்த தலைவர்களின் கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளனர்.

அரசாங்க வட்டார செய்திகளின்படி,

மொட்டு கட்சியின் தலைமையை ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த ஞாயிற்றுக்கிழமை லங்கதீபா செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கைக்கு எதிராக அழுத்தம் கொடுக்கப்படுவதால் ஜனாதிபதி கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் அந்த வட்டார செய்திகளில் இருந்து அறியக்கிடைக்கின்றது.

அமைச்சர் விமல் வீரவன்சவின் அறிக்கை தொடர்பாக சிறி லங்கா பொதுஜன பெரமுண (மொட்டு கட்சி) யின் பொதுச்செயலாளர் சாகர கரியவசம் நேற்றைய (8)  ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இந்த கருத்தை தெரிவித்தமைக்காக விமல் வீரவன்ச பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி