அரச தலைவராக பொறுப்பேற்ற கோதபாய ராஜபக்ஷ அரசியல் அரங்கில் அனுபவம் வாய்ந்த நபர் அல்ல என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அவர் நாட்டின் தலைமையை ஏற்றுக் கொண்ட பின்னர் அவருக்கு மொட்டின் தலைமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை ஜனாபதி செயலகத்துக்குள்  மட்டும் தனிமைப்படுத்துவது பொருத்தமானதல்ல, ஏனெனில் இது ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்பை பலவீனப்படுத்தும், மேலும் இது அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நல்வாழ்வுக்கு உகந்ததாக இருக்காது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வார இறுதி 'லங்காதீப' செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் பங்கேற்றபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மொட்டுக் கட்சியின் தலைவராகவும், பசில் ராஜபக்ஷ தேசிய அமைப்பாளராகவும் உள்ளனர்.

இத்தகைய சூழலில் சிலர் தங்கள் தனிப்பட்ட நலனுக்காக செயற்பட்டு வருவதால் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாகவும், அந்த மட்டுப்படுத்தப்பட்ட குழுவினர் தங்கள் ஒரே இலக்கை அடைவதற்கான முயற்சிகள் அரசாங்கத்திற்கு பெரும் தீங்கு விளைவிப்பதாகவும் கூறினார்.

அந்த சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்க யாருடைய அபிலாஷைகள் அனுமதிக்கப்படும் என்பது குறித்து தனக்கு தெளிவாக தெரியவில்லை என்று அமைச்சர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி