வெளிநாடுகளில் கொவிட் தடுப்பூசி பெற்ற பின்னர் இலங்கைக்கு வரும் தொழிலாளர்கள் தாங்களே சுய தனிமைப்படுத்த தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு மத்திய கிழக்கிற்கான இலங்கை தொழலாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் முழு கொவிட் தடுப்பூசியைப் பெறும் இலங்கையர்கள் இலங்கைக்குத் திரும்பும்போது ஹோட்டல் தனிமைப்படுத்தல் அல்லது அரசாங்க தனிமைப்படுத்தலை நாடாமல் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் பிரதியை மத்திய கிழக்கிற்கான இலங்கை தொழலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இலங்கை தூதர் மல்ராஜ் சில்வாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று, மத்திய கிழக்கில் உள்ள நாடுகளால் கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் வசிப்பவர்கள் அனைவரும் கொவிட் தடுப்பூசியை அரசாங்கத்தின் முழு ஆதரவோடு பெற வேண்டும் என்றும், பி.சி.ஆர் சோதனை மற்றும் கொவிட் தடுப்பூசி சான்றிதழ் மென்பொருள் மூலம் புதுப்பிக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, உலகில் எங்கிருந்தும் பி.சி.ஆர் சோதனைகளைப் பெற அல்லது கொவிட் தடுப்பூசி பெற்ற ஒருவரிடமிருந்து சான்றிதழைப் பெற கியூ ஆர் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

4 meslc

இந்த சூழலில், மத்திய கிழக்கிற்கான இலங்கை தொழிலாளர் சங்கம், ஒரு வருட சேவைக்குப் பிறகு, 28 நாள் விடுமுறையில் இலங்கைக்குத் திரும்ப அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு அந்நிய செலாவணியை உழைத்து அனுப்பும் இலங்கையர்களை மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல வெளிநாடுகளில் பணியாற்றி வருவதுடன் அவர்கள் 'நாட்டின் வீரர்கள்' என்று பெருமை படுத்தப்படுகின்றனர்.

1 meslc

2 meslc

3 meslc

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி