1200 x 80 DMirror

 
 

இலங்கையின் மனித உரிமைகள் பதிவை கடுமையாக விமர்சித்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அறிக்கை, தற்போதைய அரசாங்கத்திற்கு "தீங்கிழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்" அந்த அறிக்கையை கண்டனம் செய்து அரசாங்கம் அதை நிராகரிக்க முடிவு செய்துள்ளதுள்ளதாகும் அறிக்கிடைக்கின்றது

எவ்வாறாயினும், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மைக்கேல் பேச்லெட்டின் அறிக்கைக்கு அரசாங்கத்தின் பதில் ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் அது பகிரங்கப்படுத்தப்படாது என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார்.

"ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கை இலங்கைக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அதன் உள்ளடக்கங்களை வெளியிடுவதில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன மாநாட்டில் உரையாற்றும்போது அதை பகிரங்கப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த அறிக்கை இரண்டு கருத்தியல் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அமைச்சர், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கை அதன் நோக்கத்திற்கு மாறாக தயாரிக்கப்பட்டுள்ளதாக மேலும் குற்றம் சாட்டினார்.

“தீர்மானங்கள் 30/1 மற்றும் 40/1 முதல் உயர் ஸ்தானிகர் கொடுக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 17 மற்றும் ஒன்றரை பக்க அறிக்கையின் இரண்டரை பக்கங்கள் மட்டுமே அவற்றின் எல்லைக்குள் எழுதப்பட்டுள்ளன. மற்றவைகள் தங்கள் நோக்கத்திற்கு மாறாக தற்போதைய அரசாங்கத்தைப் பற்றி வெறுக்கத்தக்க அறிக்கையைத் தயாரித்துள்ளனர். ”

இரண்டாவதாக, அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான ஆதாரங்களை முன்வைக்க ஆணையாளர் தவறிவிட்டார் என்று அமைச்சர் கமன்பில கூறுகிறார்.

"மனித உரிமைகள் ஆணையாளர் தனது ஆதாரங்களை மேற்கோள் காட்டத் தவறிவிட்டார். இரண்டு காரணிகளின் அடிப்படையில் இந்த அறிக்கையை நிராகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக" அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

சிலியின் முன்னாள் ஜனாதிபதியான ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மைக்கேல் பேச்லெட், தனது அறிக்கையில் இலங்கை கடுமையான மனித உரிமை மீறல்களை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் மற்றும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாடுகளில் வழக்குத் தொடரவும், சொத்துக்களை இடைநிறுத்தவும், போர்க்குற்றங்கள் மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுகளுக்கு பயணத் தடைகளை விதிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கை ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் பிப்ரவரி 22 முதல் மார்ச் 23 வரை விவாதிக்கப்படவிருக்கின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி