Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

2028இல் நாடு மீண்டும் வங்குரோத்தாகும்: சம்பிக்க கணிப்பு

T

The Leader Desk

பிப்ரவரி 19, 2024 • 9:29 AM

2028இல் நாடு மீண்டும் வங்குரோத்தாகும்: சம்பிக்க கணிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
  • இதேவேளை வியட்னாம், பங்களாதேஷ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையின் மின்சாரக் கட்டணங்கள் 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
  • மின்சாரக் கட்டணம் மற்றம் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் 2028ம் ஆண்டில் மீண்டும் நாடு வங்குரோத்து அடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மர்மநபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாகவும் ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்படும் புள்ளிவிபரத் தகவல்கள் குறித்து விஞ்ஞானபூர்வமான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிழையான தகவல்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் தங்களது கணித அறிவினை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை வியட்னாம், பங்களாதேஷ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையின் மின்சாரக் கட்டணங்கள் 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் அதிகமாக அறவீடு செய்யப்படுவதால் கைத்தொழிற்துறை பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சாரக் கட்டணம் மற்றம் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் 2028ம் ஆண்டில் மீண்டும் நாடு வங்குரோத்து அடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மின்சார சபையின் செயற்பாடுகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மர்மநபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாகவும் ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கட்சியின் ஆதரவாளர்கள், கட்சியிலிருந்து விலகிச் செல்லும் நிலையை உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சஜித்தின் இந்த நடவடிக்கை கட்சியை நாளாந்தம் பலவீனப்படுத்துவதாக பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் இதன் காரணமாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு அதிக மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

எதிர்கட்சி தலைவருக்கு அப்பால் வேறு இருவரின் கட்டுப்பாட்டின் கீழ் கட்சி உள்ளது. குறித்த இருவரும் யார் என்பது தொடர்பில் நேரம் வரும் போது தகவல் வெளியிடுவேன்.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது தற்போது குடும்ப வர்த்தகமாக மாறியுள்ளது. கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவுகின்றது. ஜனநாயகம் என்ற எதுவும் கட்சிக்குள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...