இன்று காலை 10.30 மணியளவில் மோட்டார் காரில் வந்த இனந்தெரியாத நபர்கள், ஒருவரைக் குறிவைத்து சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான 'கரந்தெனிய சுத்தா' எனப்படும் நபரின் மூத்த சகோதரியின் கணவரே இவ்வாறு சுடப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


