சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஹூங்கம, ரன்ன, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில், இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
28 வயதுடைய கணவரும் அவரது மனைவியுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த தம்பதியினர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
எவ்வாறாயினும் தம்பதியினர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சடலங்கள் மீதான பிரேத பரிசோதனையை இன்று (07) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


