எனினும், அத்திட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கருத்திற்கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
காலியில் நிர்மாணிக்கப்பட்ட 5 மெகாவோட் சூரிய சக்தி மின் திட்டத்தை நேற்று (04) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர், காற்றாலை மின்னுற்பத்தி ஒரு தேசிய தேவை மற்றும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, "இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புத் திட்டமும் அப்படித்தான். மின்சாரத் துறையில் அரச உரிமையை உறுதி செய்வதை அரசாங்கத்தின் கொள்கையாகக் கொண்ட ஒரு அரசாங்கம் இது. ஊழியர் உரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பாதுகாத்து, தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் முடிந்தவரை கலந்துரையாடி, மிகவும் நல்லெண்ணத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் அந்தத் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம். நாட்டின் எரிசக்தித் துறையின் இலக்குகளை அடைய வேண்டுமானால், அந்த மறுசீரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது அவசியம். எனவே, அந்தத் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்றார்.
இதேவேளை, மன்னாரில் காற்றாலை விடயம் நீண்டு கொண்டு செல்கிற நிலையில் மன்னார் மாவட்டம் போராட்டத்தினால் முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இப் போராட்ட த்தினால் அரசு பாரிய இடர்களை சந்திக்கின்ற நிலையில் மன்னார் மக்கள் தமது போராட்டம் நியாயமானது, அதற்கான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் போராடி வருகின்றனர். எனவே மக்களின் அரசாங்கம் என்ற வகையில் அரசு விட்டுக் கொடுப்பிற்கு வரவேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் சனிக்கிழமை (4) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் தற்போது காற்றாலை மின் உற்பத்தி செயல் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைக்கின்றமை முதன்மை பெறுகிறது.
குறித்த விடயம் மன்னார் மாவட்டம் மட்டும் இன்றி உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் ஒரு பேசும் பொருளாக காணப்படுகின்றது.
குறித்த காற்றாலை திட்டம் மன்னார் தீவு பகுதியில் உள்ள மக்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பு என்பதை இந்த இரண்டு மாத காலங்களாக ஜனநாயக ரீதியில் குரல் கொடுத்து வருகின்ற மக்களினால் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
குறித்த காற்றாலை திட்டத்திற்கு எதிராக மன்னார் மாவட்டம் மற்றும் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலும் மக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டங்களின் ஊடாக மன்னார் தீவு பகுதிக்குள் மக்களை பாதிக்கும் குறித்த காற்றாலை மின் உற்பத்தி திட்டம் வேண்டாம் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே மன்னார் தீவில் அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாலைகள்,அதற்கு அப்பால் ஜனாதிபதி அவர்கள் அண்மையில் அனுமதித்த 14 காற்றாலைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ள நிலையில்,குறித்த நடவடிக்கைகளினால் மன்னார் மாவட்டம் பாரிய சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது.
இந்த அரசாங்கம் மக்களுக்கானது.மக்களின் கோரிக்கைகளுக்கு எதிராக நாங்கள் எதையும் செய்ய மாட்டோம் என்று கூறு மக்களிடம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்று இன்று ஆட்சி அமைத்துள்ளது.
தற்போது மக்களின் கருத்து ஒரு விதத்திலும், ஜனாதிபதியினுடைய கருத்தும்,அரசினுடைய கருத்தும் இன்னொரு விதத்திலும் அமைந்துள்ளமை நாங்கள் தற்போது பார்த்து வருகிறோம்.
எனவே எது எவ்வாறு இருந்தாலும் காற்றாலை விடையம் நீண்டு கொண்டு செல்கிறது.மன்னார் மாவட்டம் போராட்டத்தினால் முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இப்போராட்டத்தில் அரசு பாரிய இடர்களை சந்திக்கின்றது.மன்னார் மக்கள் தமது போராட்டம் நியாயமானது.அதற்கான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் போராடி வருகின்றனர். எனவே மக்களின் அரசாங்கம் என்ற வகையில் அரசு விட்டுக் கொடுப்பிற்கு வரவேண்டும் என்றார்.
'காற்றாலை மின்னுற்பத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்!'
T
The Leader Desk
அக்டோபர் 5, 2025 • 3:37 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- எனினும், அத்திட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கருத்திற்கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
- காலியில் நிர்மாணிக்கப்பட்ட 5 மெகாவோட் சூரிய சக்தி மின் திட்டத்தை நேற்று (04) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
- மன்னாரில் உள்ள அலுவலகத்தில் சனிக்கிழமை (4) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
- ஏற்கனவே மன்னார் தீவில் அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாலைகள்,அதற்கு அப்பால் ஜனாதிபதி அவர்கள் அண்மையில் அனுமதித்த 14 காற்றாலைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ள நிலையில்,குறித்த நடவடிக்கைகளினால் மன்னார் மாவட்டம் பாரிய சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

