Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

அரசாங்கத்திலிருந்து வெளியேறுகிறார் விஜயதாஸ?

T

The Leader Desk

ஏப்ரல் 29, 2024 • 4:58 AM

அரசாங்கத்திலிருந்து வெளியேறுகிறார் விஜயதாஸ?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பதில் தலைவராக நியமிக்கப்பட்ட அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, கடந்த சில வாரங்களாக அரசாங்கத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக மாறியுள்ளார்.
  • இவ்வாறான பின்னணியில், சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதியை சந்திப்பதற்கு விஜயதாச ராஜபக்ச அவகாசம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • எனினும், நீதிமன்றம் அவரது நியமனத்துக்குத் தடை விதித்தது.
எழுத்து அளவு:

பதில் தலைவராக நியமிக்கப்பட்ட  அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, கடந்த சில வாரங்களாக அரசாங்கத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக மாறியுள்ளார்.

எனினும், நீதிமன்றம் அவரது நியமனத்துக்குத் தடை விதித்தது. அத்துடன், அந்த கட்சியில் நிமல் தரப்பு, மைத்திரி தரப்பு என இரு தரப்பினர் பிரிந்து செயற்படுகின்றனர்.

இந்நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் விஜயதாச ராஜபக்சவின் பிரச்சினையை அடிப்படையாக வைத்து அரசாங்க தரப்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சார்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவும், விஜயதாச ராஜபக்சவும் ஒரே அமைச்சரவையில் இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிமல் சிறிபால டி சில்வாவின் அணிக்கு ஜனாதிபதி ரணில் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோரின் ஆதரவு இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான பின்னணியில், சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதியை சந்திப்பதற்கு விஜயதாச ராஜபக்ச அவகாசம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கையின் பிரகாரம் இருவருக்கும் இடையில் விசேட நேரடிக் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“தற்போது பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உங்களை மொட்டுக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு தயாராகியுள்ளன. அப்படி நடந்தால் உங்களை அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவீர்கள்” என இந்த சந்திப்பில் ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அதற்கு முகங்கொடுக்கத் தயார் என்று விஜயதாச ராஜபக்ச தனது வழக்கமான புன்னகையுடன் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தான் அரசியலை ஆரம்பித்ததாகவும், அதன் காரணமாகவே அக்கட்சியின் பதில் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதியிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...