Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘கோட்டாபயவுக்கு போல் எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்!’

T

The Leader Desk

ஏப்ரல் 29, 2024 • 4:54 AM

‘கோட்டாபயவுக்கு போல் எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்!’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்ட அனுரகுமார திஸாநாயக்க, இம்முறை அவர்களின் தெரிவாக தேசிய மக்கள் சக்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
  • இந்த நிலையில், சுவீடனில் வாழும் இலங்கையர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ள வேண்டுமெனவும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் நிகழ்நிலை பிரசாரத்தினை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
  • சுவீடனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்ட அனுரகுமார திஸாநாயக்க, இம்முறை அவர்களின் தெரிவாக தேசிய மக்கள் சக்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சுவீடனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தற்போது அரசியல் மாற்றம் மற்றும் இலங்கைக்கான புதிய மாற்றத்திற்காக பிரசாரம் செய்து வருவதாகவும், அந்த மாற்றத்தை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தி விரும்பம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சுவீடனில் வாழும் இலங்கையர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ள வேண்டுமெனவும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் நிகழ்நிலை பிரசாரத்தினை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்வரும் தேர்தல்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முக்கிய சக்தியாக இருப்பதாகத் தெரிவித்த அனுர, அதிகாரத்தைப் பெறுவதற்கும், அதிகாரத்தைப் பெற்ற பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், கோட்டாபயவை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றிய புலம்பெயர் இலங்கையர்கள், மக்களின் அபிலாஷைகளை தகர்த்தெறிந்த பின்னர் அவரை வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற கருத்தை உருவாக்கியதாகவும் அனுரகுமார இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

01 WhatsApp Tamil 350

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...