Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஜனாதிபதியின் வேட்பாளர் பற்றிய அறிவிப்பை பிற்போட்டு வருவதற்கான காரணம் வெளியானது!

T

The Leader Desk

ஏப்ரல் 28, 2024 • 1:50 PM

ஜனாதிபதியின் வேட்பாளர் பற்றிய அறிவிப்பை பிற்போட்டு வருவதற்கான காரணம் வெளியானது!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பற்றிய இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி வேட்புமனு தொடர்பில் அறிவிக்கப்பட்ட பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என இந்தக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆனால் முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கவின் முடிவை மே மாத நடுப்பகுதியில் அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

பற்றிய இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கவின் முடிவை மே மாத நடுப்பகுதியில் அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பெசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

அந்த சந்திப்பின் பின்னர், ஜனாதிபதி மற்றும் பெசில் ராஜபக்ஷவுடன், பிரதமர் தலைமையில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களின் சந்திப்பும் இடம்பெற்றது.

ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி வேட்புமனு தொடர்பில் அறிவிக்கப்பட்ட பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என இந்தக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும், ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ரணில் - பெசில் சந்திப்பின் பின்னர் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பில், பிரதமர் தினேஷ் குணவர்தன, அmமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டீ சில்வா, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், கஞ்சன விஜேசேகர மற்றும் அநுர யாப்பா ஆகியோரையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

மக்களுக்குப் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதில் ஏற்படக்கூடிய சிக்கலைத் தவிர்க்கவே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பு பிற்போடப்பட்டு வருவதாக, அரசாங்க உள்விவகாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

01 WhatsApp Tamil 350

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...