Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘ரஷ்யாவில் கூலிப் படைகளாக செயற்படும் இலங்கையர்கள்’

T

The Leader Desk

ஏப்ரல் 26, 2024 • 1:05 PM

‘ரஷ்யாவில் கூலிப் படைகளாக செயற்படும் இலங்கையர்கள்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
  • அதாவது ரஷ்யாவுக்கு சென்ற தமது உறவுகளுக்கு 3,4 மாதங்களாக சம்பளமும் இல்லை, இவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்றும் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
  • எனினும் அவர்கள் யுத்தத்தில் பங்கெடுத்துள்ளனர்.
  • அவர்களுக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது என கூறினார்கள்.
எழுத்து அளவு:

ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ரஷ்யா உக்ரைன் யுத்தத்திற்காக இந்த நாட்டிலிருந்து பலர் அனுப்பப்பட்டுள்ளனர். இது ரஷ்ய அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயமல்ல. எனவே அவர்கள் இது தொடர்பில் பொறுப்பு கூறத்தேவையில்லை.

நேற்றுமுன்தினம் இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றின் கவனத்திற்கு நான் இதனை கொண்டுவந்த நிலையில், இலங்கையில் உள்ள பலர் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதாவது ரஷ்யாவுக்கு சென்ற தமது உறவுகளுக்கு 3,4 மாதங்களாக சம்பளமும் இல்லை, இவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்றும் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவரோடு கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளேன். இவ்வாறு இலங்கையிலிருந்து சென்ற பெருந்தொகையானோர் முகாம்களில் வேலை செய்வதற்காகத்தான் அனுப்பப்பட்டார்கள்.

குறிப்பாக முகாம்களில் வேலை செய்யும் பணியாளர்களாகவே அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள். எனினும் அவர்கள் யுத்தத்தில் பங்கெடுத்துள்ளனர்.

அதேவேளை சிலர் முகாம்களில் வேலை செய்வதாக எனக்கு அறியத்தந்துள்ளார்கள். சில பெண்கள் என்னுடன் தொடர்புகொண்டு கதைத்தார்கள். அவர்களுக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது என கூறினார்கள்.

இவ்வாறு முகாம்களில் வேலை செய்கின்றபோது 15 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை கொடுக்கின்றோம் நீங்கள் யுத்தத்திற்கு வாருங்கள், எமது யுத்த அணியினருடன் சேருங்கள் எனவும் அழைப்பு விடுக்கின்றனர் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இது தொடர்பில் ஒரு தெரிவு குழுவை நியமித்து உடனடியாக ஆராயுங்கள். இது தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்துடன் கலந்துரையாடுங்கள். இது ரஷ்ய அரசாங்கத்தினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது அல்ல. உண்மையிலேயே இவர்கள் கூலிப்படைக்கே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

 

01 WhatsApp Tamil 350

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...