Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

துமிந்த, முஸ்தபாவுக்கு புதிய பதவிகள்: சு.கவிலிருந்து நீக்கப்பட்டோரை மீள இணைக்கும் குழு

T

The Leader Desk

ஏப்ரல் 26, 2024 • 5:30 AM

துமிந்த, முஸ்தபாவுக்கு புதிய பதவிகள்: சு.கவிலிருந்து நீக்கப்பட்டோரை மீள இணைக்கும் குழு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதேவேளை, பல்வேறு காரணங்களினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை மீள கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
  • அந்த குழுவிற்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கான பொறுப்பு முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் ஒன்று அந்தக் கட்சியின் பதில் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று கூடிய போதே, இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இதேவேளை, பல்வேறு காரணங்களினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை மீள கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் ஒன்று அந்தக் கட்சியின் பதில் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று கூடிய போதே, இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

அந்த குழுவிற்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கான பொறுப்பு முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலுக்கு நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட தரப்பினர் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

01 WhatsApp Tamil 350

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...