Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘பொலிஸாரின் விசாரணையில் திருப்தி இல்லை’

T

The Leader Desk

ஏப்ரல் 25, 2024 • 12:15 PM

‘பொலிஸாரின் விசாரணையில் திருப்தி இல்லை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
  • இது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தோட்ட கம்பனிகளும் இணைந்து நாங்கள் அவர்களுக்கு எதிராக மக்களுடைய உரிமைகளுக்காக பேசுகின்ற காரணத்தால் எங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே இதை நான் பார்க்கின்றேன்.
  • அதேவேளை முதலில் எனக்கு அச்சுறுத்தல் விடுத்த குழுவினர் மீண்டும் 23 ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றின் போது அதேபாணியில் எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
எழுத்து அளவு:

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எனக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எனது புகாரை நான் வழங்கியிருக்கின்றேன். எனினும் பொலிஸாரின் விசாரணைகளில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.

அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் செல்லமுத்து மற்றும் அவருடைய மகன்களும் தோட்ட கம்பனியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வசிக்கின்றனர். அவருடைய மகன் அந்த தோட்ட கம்பனியிலேயே எழுதுவினைஞராக பணியாற்றுகின்றார். எனவே, இது தொடர்பில் எனக்கு சந்தேகம் எழுகின்றது.

இது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தோட்ட கம்பனிகளும் இணைந்து நாங்கள் அவர்களுக்கு எதிராக மக்களுடைய உரிமைகளுக்காக பேசுகின்ற காரணத்தால் எங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே இதை நான் பார்க்கின்றேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நாம் வன்முறை கலாச்சாரத்தை எதிர்க்கின்றோம், வன்முறை அரசியலையும் எதிர்க்கின்றோம், கருத்து சுதந்திரத்தை மதிக்கின்றோம்.

எம்மிடம் அடியாட்கள் இல்லை, சலுகைக்கு விலை போகின்றவர்களும் இல்லை, கூலிக்கு அரசியல் செய்பவர்களும் இல்லை.

எனவே, எம்மை ஜனநாயக வழியில் செயற்பட அனுமதியளியுங்கள். எமக்கான நீதியை விரைந்து பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுக்கின்றேன்.

அதேவேளை முதலில் எனக்கு அச்சுறுத்தல் விடுத்த குழுவினர் மீண்டும் 23 ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றின் போது அதேபாணியில் எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.

எனவே, இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

 

01 WhatsApp Tamil 350

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...