Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு வழக்கு ஒத்திவைப்பு

T

The Leader Desk

ஏப்ரல் 24, 2024 • 12:41 PM

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு வழக்கு ஒத்திவைப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
  • குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (24) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
  • அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இவ் வழக்கிற்கு 07 எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில் 2ம்,4ம் எதிராளிகளான தலைவராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்,செயலாளராக தெரிவாகிய ச.குகதாசன் ஆகியோர்களுக்கு சார்பாக ஆஜராகினேன்.
  • கடந்த பெப்ரவரி 15ம் திகதி வழகுகல் தாக்கல் செய்யப்பட்டு 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எழுத்து அளவு:

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (24) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இவ் வழக்கிற்கு 07 எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில் 2ம்,4ம் எதிராளிகளான தலைவராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்,செயலாளராக தெரிவாகிய ச.குகதாசன் ஆகியோர்களுக்கு சார்பாக ஆஜராகினேன்.

சுமார் மூன்று மணி நேரங்கள் இவ் வழக்கு விவாதிக்கப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டது. கடந்த பெப்ரவரி 15ம் திகதி வழகுகல் தாக்கல் செய்யப்பட்டு 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு பொதுநலன் கருதி முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.  கட்சி யாப்பை மீறியதாக இங்கு எதுவும் சொல்லப்படவில்லை. குறிப்பாக சில விதிகளில் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது இதன் பிரகாரம் வழக்கு தொடர்ந்தால் அதனை வெற்றி கொள்ளலாம். ஆனால் காலம் செல்லும் இதனால் வழக்கை காலம் சென்ற நிலையில் வெற்றி கொண்டால் தோல்வியாகவே கருதப்படும்.

வழக்காளி கோரும் நிவாரணத்தை வழங்க தயாராக இருக்கிறோம். எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை இதனை வழக்காளி தனது சட்டத்தரணி ஊடாக தெரிவிக்க வேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும் என எனது வாதத்தை நீதிமன்றில்  தெரிவித்தேன்  எனவும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...