Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

மைத்திரியின் தலைமைத்துக்கும் தீர்மானங்களுக்கும் தொடர்ந்து சிக்கல்

T

The Leader Desk

ஏப்ரல் 24, 2024 • 7:21 AM

மைத்திரியின் தலைமைத்துக்கும் தீர்மானங்களுக்கும் தொடர்ந்து சிக்கல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீதிமன்றத்தினால் இன்று (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  • இதேவேளை, அமைச்சர் மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தடை உத்தரவை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பிட்டுள்ளது.
  • இந்தத் தடையுத்தரவானது, எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி வரை நீடிக்குமாறு நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

நீதிமன்றத்தினால் இன்று (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொண்டேகு சரத்சந்திர சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பில் கவனத்திற்கொண்ட கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், விசாரணை முடியும் வரை இந்தத் தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்றும், நீதவான் அறிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தடை உத்தரவை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பிட்டுள்ளது.

இந்தத் தடையுத்தரவானது, எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி வரை நீடிக்குமாறு நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக அமைச்சர்கள் தாக்கல் செய்த முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...