Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சு.க பதில் தலைவர் நியமனங்களால் பிளவடைந்த அணிகளுக்குள் முரண்பாடு உச்சம்

T

The Leader Desk

ஏப்ரல் 23, 2024 • 3:50 AM

சு.க பதில் தலைவர் நியமனங்களால் பிளவடைந்த அணிகளுக்குள் முரண்பாடு உச்சம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இறங்கியுள்ளனர் என்று அறியமுடிகின்றது.
  • அதேபோல், சு.கவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மைத்திரியால் நீக்கப்பட்ட தயாசிறி தயசேகர இந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்தி கட்சிக்குள் இருக்கும் அவரது விசுவாசிகளுடன் இணைந்துகொண்டு கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்று அறியமுடிகின்றது.
  • முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழு, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழு மற்றும் தயாசிறி ஜயசேகர தலைமையிலான குழு போன்றன இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தகவல்கள் கூறுகின்றன.
எழுத்து அளவு:

இறங்கியுள்ளனர் என்று அறியமுடிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழு, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழு மற்றும் தயாசிறி ஜயசேகர தலைமையிலான குழு போன்றன இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தகவல்கள் கூறுகின்றன.

மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க மற்றும் லசந்த அழகியவண்ண ஆகியோர் அரசோடு இணைந்து நிற்பதன் காரணமாக அவர்கள் மூவரையும் சு.கவில் வகித்த பதவிகளில் இருந்து மைத்திரிபால சிறிசேன நீக்கினார்.

இதற்கு எதிராக அவர்கள் நீதிமன்றம் சென்றனர். மைத்திரிபால கட்சியின் தலைவராக பதவி வகிப்பதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அவர்கள் மூவரும் சந்திரிகாவின் விசுவாசிகள். சந்திரிக்காவே கட்சியின் தலைவராக வர வேண்டும் என்று அவர்கள் பாடுபடுகின்றார்கள்.

அதேபோல், சு.கவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மைத்திரியால் நீக்கப்பட்ட தயாசிறி தயசேகர இந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்தி கட்சிக்குள் இருக்கும் அவரது விசுவாசிகளுடன் இணைந்துகொண்டு கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்று அறியமுடிகின்றது.

அதேபோல், நீதிமன்றத் தடை நீங்கியதும் மைத்திரியே மீண்டும் தலைவராக வருவார். அந்தத் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மைத்திரி தரப்பு வியூகம் வகுத்து வருவதையும் அறியமுடிகின்றது. “

இவ்வாறு மூன்று தரப்பினர் சு.கவை கைப்பற்றுவதற்குக் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமையைக் காண முடிகின்றது.

நீதிமன்றத் தடை அமுலில் இருப்பதால் மேற்படி மூன்று தரப்புக்களில் சந்திரிகா அணி, சு.கவின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமித்துள்ளது. அதேவேளை, மைத்திரி அணி,சு.கவின் பதில் தலைவராக விஜயதாஸ ராஜபக்ஷவை நியமித்துள்ளது. பதில்தலைவர் நியமனங்களால் சு.க. பிளவு அணிகளுக்குள் முரண்பாடு வலுத்துள்ளது.

 

01 WhatsApp Tamil 350

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...