Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

விஜயதாசவின் அமைச்சுப் பதவி பறிப்பு?

T

The Leader Desk

ஏப்ரல் 23, 2024 • 3:39 AM

விஜயதாசவின் அமைச்சுப் பதவி பறிப்பு?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்சி உறுப்புரிமை மற்றும் அமைச்சுப் பதவி ஆகியவற்றையும் இழக்க நேரிடும் என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
  • இந்த நாட்டின் நீதி மற்றும் சட்டம் தொடர்பாக நன்றாக தெரிந்த விஜயதாச ராஜபக்ஷ போன்ற ஒருவர் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிக்கித்து வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதன் பாரதூரமான காரணிகளை அவர் நன்கு அறியக்கூடும்.
  • கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

கட்சி உறுப்புரிமை மற்றும் அமைச்சுப் பதவி ஆகியவற்றையும் இழக்க நேரிடும் என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டமை பாரதூரமான விடயமாகும்.

கட்சி என்ற ரீதியில் இதற்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம். விஜயதாச ராஜபக்ஷ கட்சி உறுப்புரிமையை இழக்கும் நிலையும் காணப்படுகின்றது.

இந்த நாட்டின் நீதி மற்றும் சட்டம் தொடர்பாக நன்றாக தெரிந்த விஜயதாச ராஜபக்ஷ போன்ற ஒருவர் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிக்கித்து வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதன் பாரதூரமான காரணிகளை அவர் நன்கு அறியக்கூடும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பின் பிரகாரம் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர் பிறிதொரு கட்சியின் அங்கத்துவத்தை பெறம் பட்சத்தில் அவரது கட்சி உறுப்புரிமை நீக்கப்படும்.

கடந்த காலங்களில் அவ்வாறான சம்பவங்கள் இடத்பெற்றிருந்தன. எனவே விஜயதாச ராஜபக்ஷ விடயம் தொடர்பாக கட்சியின் ஒழுக்காற்றுகுழுவில் பெரும்பாலும் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

விஜயதாச ராஜபக்ஷவின் அமைச்சு பதவி நீக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...