Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

தரமற்ற அரிசி தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

T

The Leader Desk

ஏப்ரல் 23, 2024 • 3:37 AM

தரமற்ற அரிசி தொடர்பில் அரசாங்கம் விளக்கம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்காக வெயங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது.
  • முத்திரையுடன் உறுதிப்படுத்தப்படும் அரிசி மாத்திரமே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளது.
  • எனவே, சுகாதார துறைக்குள் பல தரப்புக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சரியான பரிசோதனையின் பின்னரே, அரிசித் தொகையை பகிர்ந்தளிப்பதாக உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
எழுத்து அளவு:

உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்காக வெயங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது.

அரச பகுப்பாய்வுத் திணைக்களம், வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அறிக்கைகளை மையப்படுத்தியே மேற்படி அலுவலகம் இந்தப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. 

அதன்படி பல நிறுவனங்களால் மனித பாவனைக்கு உகந்தது என உறுதிப்படுத்தப்பட்ட அரிசி தொகையை, மீள் பரிசோதனை செய்து பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்குமாறு அனைத்து மாகாணச் செயலாளர்களையும் அறிவுறுத்தியிருப்பதாகவும், உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது. 

இதன்படி, மத்திய களஞ்சியசாலையில் இருந்து அந்தந்த மாகாணங்களுக்கு அரிசியைப் பகிர்ந்தளிக்க முன்னர், மாகாண கல்விக்கு பொறுப்பான தலைமை அதிகாரியொருவர் மற்றும் மாகாண பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட குழுவினரால் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் அரிசி மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முத்திரையுடன் உறுதிப்படுத்தப்படும் அரிசி மாத்திரமே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் உணவின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம், உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசியை பாடசாலைகளின் உணவு சமைப்பதற்கு விநியோகிக்கும் முன்பாக பொதுச் சுகாதார பரிசோதகர் தர நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் செயலகம் வலியுறுத்தியுள்ளது. 

அதன்படி சர்வதேச உணவுப் பொதியிடல் தர நியமங்களுக்கு அமைவாக பொதி செய்யப்பட்ட இந்த அரிசி தொகையை மே 31 ஆம் திகதி வரையில் பயன்படுத்த முடியும் என்பதை உலக உணவுத் திட்டம் உறுதி செய்துள்ளது. 

இந்த அரிசி உதவித் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றது என்பதால் பொதியின் மேற் புறத்தில் “Not for Sale” விற்பனைக்கு இல்லை எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அதனால் அந்த அரிசி மனித பயன்பாட்டிற்கு உகந்தல்ல என பொருள்படாதெனவும் உலக உணவுத் திட்டத்தின் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, சுகாதார துறைக்குள் பல தரப்புக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சரியான பரிசோதனையின் பின்னரே, அரிசித் தொகையை பகிர்ந்தளிப்பதாக உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

 

01 WhatsApp Tamil 350

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...