Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

அமைச்சர் விஜயதாசவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு

T

The Leader Desk

ஏப்ரல் 22, 2024 • 12:49 PM

அமைச்சர் விஜயதாசவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்பு தெரிவித்துள்ளது.
  • இந்த நிர்வாக சபை கூட்டத்தில் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.
  • இதன்படி, விஜயதாச ராஜபக்ஷவின் பெயர் மற்றும் நிறைவேற்று சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளார்.
எழுத்து அளவு:

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, விஜயதாச ராஜபக்ஷவின் பெயர் மற்றும் நிறைவேற்று சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20 ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று (21) காலை எத்துல்கோட்டெ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கூடியது.

இந்த நிர்வாக சபை கூட்டத்தில் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.

இங்கு கருத்து தெரிவித்த விஜயதாச ராஜபக்ஷ, “கட்சியை விட்டு வெளியேறிய அனைவரையும் ஒன்று திரட்டி நல்ல பயணத்தை மேற்கொள்ள இன்று கிடைத்த சந்தர்ப்பம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டால் கட்சி மேம்படும் என்பது மட்டுமன்றி நாடும் முன்னேற்றமடையும் என உறுதியளிக்கிறோம். எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெறும்” என தெரிவித்தார்.

 

 

01 WhatsApp Tamil 350

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...