Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

தியத்தலாவை விபத்து; இருவர் கைது

T

The Leader Desk

ஏப்ரல் 22, 2024 • 5:12 AM

தியத்தலாவை விபத்து; இருவர் கைது   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பில் இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • நேற்று பிற்பகல் இடம்பெற்ற கார் பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதுடன், விபத்தில் இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • விபத்தில் 4 போட்டிக் கண்காணிப்பாளர்கள், மூன்று பார்வையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • அவர்களில் ஒருவர் 55 வயதுடையவர் என்பதுடன் விபத்தில் உயிரிழந்த 8 வயது சிறுமியும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்.
எழுத்து அளவு:

தொடர்பில் இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட cவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற கார் பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதுடன், விபத்தில் இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் 4 போட்டிக் கண்காணிப்பாளர்கள், மூன்று பார்வையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் வெலிமடை மற்றும் டயரபவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் 55 வயதுடையவர் என்பதுடன் விபத்தில் உயிரிழந்த 8 வயது சிறுமியும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களில் சீதுவ, ராஜபக்சபுர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரும் அடங்குவார்.

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

மேலும், மாத்தறை, ராகுல வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரும், மாத்தறை, கொடகம பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், அவர் அக்குரஸ்ஸ, வளவ்வத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த மூவர் பதுளை பொது வைத்தியசாலையிலும், ஏனையவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மீதமுள்ள ஓட்டப் பந்தயங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் சுமார் 100,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஃபொகஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயம் 5 வருடங்களின் பின்னர் இந்த வருடம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...