Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் வேட்பாளர்களுக்கு ஓர் அறிவித்தல்!

T

The Leader Desk

ஏப்ரல் 21, 2024 • 5:53 AM

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் வேட்பாளர்களுக்கு ஓர் அறிவித்தல்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கூட்டணிகளின் நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறவேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
  • இவ்வாறான நிலையில் இந்தாண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
  • நீண்டகாலமாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

கூட்டணிகளின் நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறவேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதுதொடர்பில் பதவிக்கு வருவதற்கு முன்னதாக அனைத்து வேட்பாளார்களும் வாக்குறுதிகளை அளிக்கின்றபோதும், தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் அம்முறையை நீக்குவது தொடர்பில் கரிசனைகளை வெளிப்படுத்துவதில்லை.

இவ்வாறான நிலையில் இந்தாண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

நாம் நாடாளவிய ரீதியில் உள்ள சமூகக் குழுக்களுடன் உரையாடல்களைச் செய்து வருகின்ற அடிப்படையில் அனைத்தின சமூகங்களும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களை கொண்டிருப்பது புலப்படுகின்றது.

அந்தவகையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்கள், மக்களின் ஆணையைப் பெறுவதற்கு முன்னதாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம், அதற்கான கால வரையறை உள்ளிட்ட விடயங்களை வெளியிட வேண்டும். என்றார்.

 

01 WhatsApp Tamil 350

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...