Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

மூதூரில் கடும் வெப்பத்தால் மயங்கி விழுந்த விவசாயி மரணம்

T

The Leader Desk

ஏப்ரல் 20, 2024 • 1:05 PM

மூதூரில் கடும் வெப்பத்தால் மயங்கி விழுந்த விவசாயி மரணம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று (20) மதியம் இடம்பெற்றுள்ளது.
  • மூதூர் - பாலத்தடிச்சேனை கிராமத்தில் வசித்துவரும் 3 பிள்ளைகளின் தந்தையான சூரியமூர்த்தி சுதாகரன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
  • பெரியவெளி குளத்து வயலில் இன்று (20) வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியமளவில் மயக்கமுற்று விழுந்ததாகவும் உடனடியாக மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
எழுத்து அளவு:

இன்று (20) மதியம் இடம்பெற்றுள்ளது.

மூதூர் - பாலத்தடிச்சேனை கிராமத்தில் வசித்துவரும் 3 பிள்ளைகளின் தந்தையான சூரியமூர்த்தி சுதாகரன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

பெரியவெளி குளத்து வயலில் இன்று (20) வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியமளவில் மயக்கமுற்று விழுந்ததாகவும் உடனடியாக மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், வெய்யிலில் நின்று வயல் வேலை செய்கின்றவர்கள் வெயில் உச்சமான நேரங்களில் வயல் வேலை செய்வதன் தவிர்த்துக் கொள்வதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

01 WhatsApp Tamil 350

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...