Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதிக்கு கடும் இராணுவ பாதுகாப்பு

T

The Leader Desk

ஏப்ரல் 19, 2024 • 5:12 AM

இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதிக்கு கடும் இராணுவ பாதுகாப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
  • எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் பூரண பாதுகாப்பை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
  • அத்துடன், ஏனைய பாதுகாப்பு ஏற்பாடுகளை இராணுவ கமாண்டோ படை உட்பட முப்படையினரும் வழங்கவுள்ளனர்.
எழுத்து அளவு:

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் பூரண பாதுகாப்பை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்களிடம் கையளிப்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தின் போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு மிக நெருக்கமான பாதுகாப்பை வழங்கவுள்ளது.

அத்துடன், ஏனைய பாதுகாப்பு ஏற்பாடுகளை இராணுவ கமாண்டோ படை உட்பட முப்படையினரும் வழங்கவுள்ளனர்.

ஈரான் ஜனாதிபதி மத்தள விமான நிலையத்தை வந்தடைந்ததும் பிரமுகர் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறும். அதன் பின்னர் உமா ஓயாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்.

கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார்.

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

 

01 WhatsApp Tamil 350

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...