Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ருவாங் எரிமலை வெடிப்பால் சுனாமி எச்சரிக்கை

T

The Leader Desk

ஏப்ரல் 18, 2024 • 6:46 AM

ருவாங் எரிமலை வெடிப்பால் சுனாமி எச்சரிக்கை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதுகாப்பு கருதி, சுமார் 800 பேர் அத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
  • இந்தோனேசியாவின் மனாடோவிலிருந்து 100 கி.மீ.
  • தொலைவில் உள்ள ருவாங் தீவில் உள்ள ஒரு எரிமலை, நேற்று முன்தினம் (16) 3 முறைக்கு மேல் வெடித்துள்ளது.
  • தற்போது வானில் 1.8 கி.மீ.
எழுத்து அளவு:

பாதுகாப்பு கருதி, சுமார் 800 பேர் அத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் மனாடோவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ருவாங் தீவில் உள்ள ஒரு எரிமலை, நேற்று முன்தினம் (16) 3 முறைக்கு மேல் வெடித்துள்ளது. இந்த எரிமலை பல நாட்களாக சாம்பலை வெளியேற்றி வந்ததாகவும், தற்போது வெடித்துச் சிதறி வருவதாகவும் அந்நாட்டின் எரிமலை கண்காணிப்பு நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் ஆபத்து தணிப்பு மைய அதிகாரி ஹெருனிங்டியாஸ் தேசி பூர்ணமாச்சாரி கூறியதாவது:

“எரிமலையின் நெருப்புப் பிளம்பு வெளியேற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து இரண்டாவது உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களைத் தொடர்ந்து ருவாங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது வானில் 1.8 கி.மீ. உயரத்துக்கு நெருப்புப் பிளம்புகளை எரிமலை வெளியிட்டு வருகிறது. நாங்கள் இப்பகுதியிலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். ஏனெனில் எரிமலையில் மேலும் வெடிப்புகள் இருக்க வாய்ப்பு உள்ளது. எரிமலையிலிருந்து நான்கு கி.மீ. சுற்றளவுக்கு யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்” என கூறினார்.

அங்கிருந்து வெளியான வீடியோ காட்சிகளில் எரிமலை மலையிலிருந்து லாவா கீழே பாய்வதையும், அங்குள்ள நீரில் அது பிரதிபலிப்பதையும் காட்டுகின்றன. மேலும், எரிமலைக்கு மேலே சாம்பலாக பறப்பதையும் காணமுடிகிறது.

ருவாங் தீவில் சுமார் 800 பேர் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளியேற்றப்பட்டு, தற்போது அருகிலுள்ள தாகுலண்டாங் தீவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். புவியியல் ரீதியாக டெக்டோனிக் தகடுகளின் மேற்பரப்பில் அமைந்துள்ள இந்தோனேசியா அதிக நிலநடுக்கங்களை சந்திக்கும் நாடாகும். இது ‘பசிபிக் நெருப்பு வளையம்” எனவும் அழைக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...