Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

மைத்திரியின் சு.க தலைமைப் பதவிக்கு தொடர்ந்து ஆப்பு

T

The Leader Desk

ஏப்ரல் 18, 2024 • 6:38 AM

மைத்திரியின் சு.க தலைமைப் பதவிக்கு தொடர்ந்து ஆப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
  • கொழும்பு மாவட்ட நீதிமன்றால் இன்று (18) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதை தடை செய்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால், கடந்த 4ஆம் திகதியன்று, இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.
  • மேல் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டு மனுவை பரிசீலனை செய்த பின்னரே, கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே இடைகால தடை உத்தரவை பிறப்பித்திருந்தார்.
எழுத்து அளவு:

பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றால் இன்று (18) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று மீண்டும் அழைக்கப்பட்ட போதே மைத்திரிபால சிறிசேனவிற்கான தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதை தடை செய்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால், கடந்த 4ஆம் திகதியன்று, இடைக்கால தடை உத்தரவை  பிறப்பித்திருந்தது.

மேல் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டு மனுவை பரிசீலனை செய்த பின்னரே, கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே இடைகால தடை உத்தரவை பிறப்பித்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின்படி ஒரு நபருக்கு தலைவர் பதவி மற்றும் ஆலோசகர் பதவியென இரண்டு பதவிகளை வகிக்க முடியாதென்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது முறைப்பாட்டு மனுவில் தெரிவித்துள்ளதுடன், அந்த வகையில் மைத்திரிபால சிறிசேன கட்சியின் யாப்புக்கு முரணாக செயற்பட்டுள்ளதாக  அதில் சுட்டிக்காட்டியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது ஆவணங்களை சட்டத்தரணியொருவர் மூலமாக மனுவாக தயாரித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தும் வகையில் இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதற்கிணங்க, மேற்படி வழக்கு விசாரணை முடியும்வரை பிரதிவாதி மேற்படி பதவி வகிப்பதை இடைநிறுத்துமாறு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதிவாதி 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் இன்றுவரை அவர் அப்பதவியை வகிப்பதாகவும் மனுவின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளதாகவும் அதனால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளதுடன், அவ்விடயம் தொடர்பில் குறித்த வழக்கில் அவர் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

விசேட கூட்டமொன்றின் மூலம் கட்சியின் முக்கியமான மூன்று உறுப்பினர்களை அவர் விலக்கியுள்ளமை, அவரது தலைமைத்துவத்தின் கீழ் கட்சியை வீழ்ச்சியடைய செய்தமை, நம்பிக்கைக்குரிய நபராக செயற்படாமை, பொறுப்பை சரிவர நிறைவேற்றாமை ஆகிய விடயங்களும் அவர் தலைமை பதவியை வகிக்க பொருத்தமற்றதென்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி அமில திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.  இவ்வழக்கு எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...