Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சுதந்திர கட்சி தொடர்பில் மைத்திரி அதிரடிக் கருத்து

T

The Leader Desk

ஏப்ரல் 18, 2024 • 4:46 AM

சுதந்திர கட்சி தொடர்பில் மைத்திரி அதிரடிக் கருத்து   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
  • மறைந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் 108ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
  • “சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளைப் பின்பற்றிய எம்மால், சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?
எழுத்து அளவு:

பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் 108ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாவது,

“ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று எதிர்கொண்டுள்ள சவால்களை விட பாரிய சவால்களை, அன்று சிறிமாவோ பண்டார நாயக்கவின் குடியுரிமை நீக்கப்பட்ட போது எதிர்கொண்டது. ஒவ்வொருவரும் பிரிந்து சென்று தனிக்கட்சிகளை ஆரம்பித்த போது, நாம் அவருடன் தனிப்பயணம் சென்று வெற்றி பெற்றோம்.

“சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளைப் பின்பற்றிய எம்மால், சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? பண்டாரநாயக்க குமாரதுங்க தனது அமைச்சரவையிலிருந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட இரு அமைச்சர்களை பதவி நீக்கினார்.

“அதன் பின்னர் எனது ஆட்சியிலேயே அவ்வாறான சம்பவம் இடம்பெற்றது. எனது ஆட்சியின் பின்னர் அமைச்சரொருவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். இவற்றை மறக்க முடியாது. நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...