Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இலங்கையில் அதிகரித்துள்ள மாரடைப்பு மரணங்கள் குறித்து எச்சரிக்கை!

T

The Leader Desk

ஏப்ரல் 18, 2024 • 4:33 AM

இலங்கையில் அதிகரித்துள்ள மாரடைப்பு மரணங்கள் குறித்து எச்சரிக்கை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, பொது மருத்துவமனைகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பால் ஏற்பட்டதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டுகின்றது.
  • தொற்றா நோய்களுக்கு பல சிறப்பு ஆபத்து காரணிகள் உள்ளன.
  • ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்பின்மை, புகையிலை, மது அருந்துதல், மன அழுத்தம் ஆகியவை மாரடைப்புக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, பொது மருத்துவமனைகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பால் ஏற்பட்டதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டுகின்றது.

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்பின்மை, புகையிலை, மது அருந்துதல், மன அழுத்தம் ஆகியவை மாரடைப்புக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் அலுவலகத்தின் விசேட வைத்தியர் ஷெரில் பாலசிங்கம் இது தொடர்பில் பின்வருமாறு விளக்கமளித்தார்.

"இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்கள் சேதமடைவதால் இந்த நோய் நிலை ஏற்படுகிறது. இதை மாரடைப்பு அல்லது ஹாட் ஹெட்டக் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். தொற்றா நோய்களுக்கு பல சிறப்பு ஆபத்து காரணிகள் உள்ளன. முதலாவது ஆரோக்கியமற்ற அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெயின் பயன்பாடு, உடல் செயல்பாடு இல்லாமை, புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றின் பயன்பாடு ஆகும்.

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணனிகளின் அதிகரித்த பாவனையினால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவரும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையிலிருந்து விலகியுள்ளதாக வைத்தியர் ஷெரில் பாலசிங்கம் மேலும் தெரிவித்தார்.

“குழந்தைகள் ஒரே இடத்தில் அதிக நேரம் செலவழித்து ஒன்லைன் கம்ப்யூட்டர் கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.வீட்டில் வயதான இல்லத்தரசிகள் கூட எப்போதும் டி.வி பார்த்து மணிக்கணக்கில் அமர்ந்துதான் இருப்பார்கள்.மேலும் வயது வரம்பு இல்லாமல் மொபைல் போன்களுக்கு அடிமையாகி இருப்பது பெரும் சோகம். நாம் முடிந்த போதெல்லாம் நடக்க வேண்டும், என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...