Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சனிக்கிழமையன்று பாலித்த தெவரப்பெருமவின் இறுதிக் கிரியை

T

The Leader Desk

ஏப்ரல் 17, 2024 • 4:29 AM

சனிக்கிழமையன்று பாலித்த தெவரப்பெருமவின் இறுதிக் கிரியை     

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குடும்ப மயானத்தில் இடம்பெறுமென்று, அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
  • ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித்த தெவரப்பெரும, தனது 64ஆவது வயதில், நேற்றைய தினம் (16) உயிரிழந்தார்.
  • முதல் 2020 வரையான காலப்பகுதியில், களுத்துறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்ட அவர், உள்நாட்டலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் காலாச்சாரத்துறை மற்றும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர்களாகவும் செயற்பட்டுள்ளார்.
  • இது தொடர்பில், பாலித்த தெவரப்பெருமவின் மூத்த சகோதரரின் மகனான அருண் தெவரப்பெரும கூறியதாவது, “அவர், அவருடைய சொந்த் தோட்டத்தில், செடிகளுக்கு பசளையிட்டுக்கொண்டிருந்தார்.
எழுத்து அளவு:

குடும்ப மயானத்தில் இடம்பெறுமென்று, அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித்த தெவரப்பெரும, தனது 64ஆவது வயதில், நேற்றைய தினம் (16) உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கியே அவர் உயிரிழந்தார் என்று, அவருடைய உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

1960இல் பிறந்த பாலித்த குமார தெவரப்பெரும, இலங்கை அரசியலில் பலராலும் பேசப்பட்ட, பிரசித்தி பெற்ற அரசியல் கதாபாத்திரமாகும்.

2002இல், மத்துகம பிரதேச சபைத் தலைவராகத் தெரிவான பாலித்த தெவரப்பெரும, மேல் மாகாணசபை உறுப்பினராகவும் செயற்பட்டவராவார்.

2010 முதல் 2020 வரையான காலப்பகுதியில், களுத்துறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்ட அவர், உள்நாட்டலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் காலாச்சாரத்துறை மற்றும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர்களாகவும் செயற்பட்டுள்ளார்.

பாலித்த தெவரப்பெருமவின் புதைகுழி, அவர் உயிருடன் இருக்கும்போதே அவரால் தயாரிக்கப்பட்டிருந்த விவகாரம், அக்காலகட்டத்தில் பெரும் பேச்சுபொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்றைய தினம் அவர், தனது தோட்டத்தில் பிரிதொரு வேலையில் ஈடுபட்டிருந்த போதே, மின்சாரத் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளார் என்று, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், பாலித்த தெவரப்பெருமவின் மூத்த சகோதரரின் மகனான அருண் தெவரப்பெரும கூறியதாவது,

“அவர், அவருடைய சொந்த் தோட்டத்தில், செடிகளுக்கு பசளையிட்டுக்கொண்டிருந்தார். அந்தத் தோட்டத்தின் வெளிச்சத்துக்கு, சில இடங்களின் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டிருந்தது. அந்த மின்குமிழ்களுக்கான மின்சாரம் வழங்கப்பட்டிருந்த மின் வயர் ஒன்று, கீழே கிடந்துள்ளது. அதை அவர், தவறுதலாக மிதித்துவிட்டார். அப்போது அவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது. அங்கிழுந்த ஊழியர்கள், உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், வைத்தியசாலை தொலைவில் இருப்பதால், அங்கு சென்றடைய, சுமார் 40 நிமிடங்கள் கடந்துள்ளன. அதனால் அவர் உயிரிழந்துவிட்டார்” என்று, அருண் தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...