Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சிறுவர் இல்லங்களுக்கு பரிசு

T

The Leader Desk

ஏப்ரல் 14, 2024 • 6:05 AM

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சிறுவர் இல்லங்களுக்கு பரிசு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் மற்றும் பரிசுப் பொதிகள் என்பன இன்று (13) பகிர்ந்தளிக்கப்பட்டன.
  • நாடளாவிய ரீதியிலுள்ள சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும், 10,000 க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன் இனிப்பு பண்டங்களும் பரிசுப் பொதிகளும் வழங்கப்படவுள்ளன.
  • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எழுத்து அளவு:

மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் மற்றும் பரிசுப் பொதிகள் என்பன இன்று (13) பகிர்ந்தளிக்கப்பட்டன.

கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பகுதிகளிலிருக்கும் சிறுவர் இல்லங்களில் புத்தாண்டு பரிசுப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிகப்பட்டுள்ள நிலையில், இம்முறை அந்த திட்டத்தை நாடளாவிய ரீதியில் உள்ள சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசுகளும் இனிப்புப் பண்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

வீடுகள் அல்லது பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காவிட்டாலும் சகல பிள்ளைகளுக்கும் புத்தாண்டு மகிழ்ச்சி கிட்ட வேண்டும் என்ற நோக்கில், “சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கும் புத்தாண்டு” என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி அலுவலகம், “சிலோன் பிஸ்கட் கம்பனி” மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாடளாவிய ரீதியிலுள்ள சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும், 10,000 க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன் இனிப்பு பண்டங்களும் பரிசுப் பொதிகளும் வழங்கப்படவுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மத்திய மாகாணத்தி 40 நிலையங்கள், கிழக்கு மாகாணத்தில் 57 நிலையங்கள், வடமத்திய மாகாணத்தில் 16 நிலையங்கள், வடமாகாணத்தில் 23 நிலையங்கள், சப்ரகமுவ மாகாணத்தில் 19 நிலையங்கள், தென் மாகாணத்தில் 25 நிலையங்கள், ஊவா மாகாணத்தில் 14 நிலையங்கள், மேல் மாகாணத்தில் 106 நிலையங்கள் உள்ளடங்களாக 336 சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் பிள்ளைகளுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...