Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஐமச எம்பிக்களுக்கு ஜனாதிபதி விசேட சலுகை

T

The Leader Desk

ஏப்ரல் 14, 2024 • 6:03 AM

ஐமச எம்பிக்களுக்கு ஜனாதிபதி விசேட சலுகை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சலுகை வழங்குகிறார் என்று சில சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.
  • காவிந்த ஜயவர்த்தன மற்றும் அஜித் மான்னப்பெரும ஆகியோர், ஐமச எம்பிக்கள் முன்வைத்திருக்கும் வேலைத்திட்டங்களுக்கான யோசனைகளுக்கு, 50 அல்லது 60 மில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் அந்த நிதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
  • அதேவேளை, ஹர்ஷ டீ சில்வா எம்பியினால் ஜனாதிபதிக்கு நேரடியாக முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு வேலைதிட்டங்களுக்காகவும் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை பெற்றுக்கொடுக்க, ஜனாதிபதி ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, காவிந்த ஜயவர்த்தனவின் வீட்டில் நடைபெற்ற இரவு விருந்துபசார நிகழ்வு ஒன்றிலும், ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

சலுகை வழங்குகிறார் என்று சில சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்த்தன, அஜித் மான்னப்பெரும மற்றும் ஜே சி அலவத்துவல ஆகிய மூவருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதேச அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டத்துக்கான நிதியை வழங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

மொட்டுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் ஊடாக முன்வைத்திருக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு நிதி வழங்க, திறைசேறி இழுத்தடிப்பு செய்து வருவதாக குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், மேற்படி ஐமச எம்பிக்களுக்கு நிதி வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

காவிந்த ஜயவர்த்தன மற்றும் அஜித் மான்னப்பெரும ஆகியோர், ஐமச எம்பிக்கள் முன்வைத்திருக்கும் வேலைத்திட்டங்களுக்கான யோசனைகளுக்கு, 50 அல்லது 60 மில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் அந்த நிதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதேவேளை, ஹர்ஷ டீ சில்வா எம்பியினால் ஜனாதிபதிக்கு நேரடியாக முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு வேலைதிட்டங்களுக்காகவும் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை பெற்றுக்கொடுக்க, ஜனாதிபதி ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதாவது ஐமச எம்பிக்களை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தும் உத்தியை, ஜனாதிபதி விக்ரமசிங்க கையாண்டு வருகிறார் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, காவிந்த ஜயவர்த்தனவின் வீட்டில் நடைபெற்ற இரவு விருந்துபசார நிகழ்வு ஒன்றிலும், ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

அதில், ஐமச எம்பிக்கள் இருவரும் கலந்துகொண்டிருந்ததாக தெரியவந்தது. அன்றைய தினம் தனக்கு இருந்த ஏனைய வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டுதான், அன்று மாலை காவிந்த எம்பியின் வீட்டுக்கு ஜனாதிபதி சென்றிருந்தார் என்று கூறப்படுகிறது. எதுவாயினும், ஜனாதிபதி விக்ரமசிங்க இம்முறை தனக்குத் தெரிந்த அனைத்து விளையாட்டுகளையும் விளையாடுவார் என்றே தெரிகிறது. காரணம், பெரும்பாலும் இதுதான் அவருக்கு இறுதி வாய்ப்பாக அமைய உள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...