Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

அநுரவுக்கு மீண்டும் சவால் விடுத்த சஜித்

T

The Leader Desk

ஏப்ரல் 13, 2024 • 3:23 AM

அநுரவுக்கு மீண்டும் சவால் விடுத்த சஜித்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விவாதத்துக்கு வருமாறு அனுரவுக்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
  • சர்வதேச சமூகத்தின் தலைவர்கள் சந்திக்கும்போது தனிப்பட்ட சந்திப்புகள் கூட நடக்கின்றன.
  • இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு வங்குரோத்தடைந்துள்ள வேளையில், நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை மக்கள் ஆணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எழுத்து அளவு:

விவாதத்துக்கு வருமாறு அனுரவுக்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 154 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மொனராகலை, வெல்லவாய, தனமல்வில, கெத்சிரிகம கனிஷ்ட வித்தியலாயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு வங்குரோத்தடைந்துள்ள வேளையில், நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை மக்கள் ஆணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது, விவாதங்களும், வாதங்களும், தர்க்கங்களும், கலந்துரையாடல்களும் நடக்க வேண்டும்.

முன்மொழிவுகள், பார்வைகள் மற்றும் வேலைத்திட்டங்களை முன்வைக்காமல் எதனையும் பெற முடியாது.

சர்வதேச சமூகத்தின் தலைவர்கள் சந்திக்கும்போது தனிப்பட்ட சந்திப்புகள் கூட நடக்கின்றன. மொழித்திறன் இல்லை என்றால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறான திறமை இல்லாதவர்களுக்கு நாட்டின் தலைமைத்துவத்தை வழங்குவது மீண்டும் பாதாளத்தில் விழுவதைப் போன்றதாகும்.

விவாதம் நடத்த நான் எந்நேரத்திலும் தயாராக இருக்கின்றேன். இவ்வாறான விவாதங்களில் இருந்து தப்பியோட வேண்டாம்.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் எனது பொருளாதார கொள்கை வகுப்பாக்கக் குழுவினரோடு மாற்று அணியின் பொருளாதாரக் குழுக்களையும் ஒன்றிணைத்து விவாதம் நடத்துவோம் என நாகரிகமாக அழைக்கும்போது, கோழைகள் போன்று விவாதங்களில் இருந்து தப்பியோட வேண்டாம் எனப் புரட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...