Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

கொரோனாவால் ஒருவர் திடீர் மரணம்

T

The Leader Desk

ஏப்ரல் 12, 2024 • 3:11 PM

கொரோனாவால் ஒருவர் திடீர் மரணம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீண்ட நாட்களின் பின்னர் மற்றுமொரு மரணம் இன்று பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
  • குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

நீண்ட நாட்களின் பின்னர் மற்றுமொரு மரணம் இன்று பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் உயிரிழந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக, உயிரிழந்த நபர் சிகிச்சை பெற்றுவந்த விடுதியில் உள்ள நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படும் இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படாமல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், இதன் காரணமாக நாட்டில் மீண்டும் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...