Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘மொட்டும் இல்லை, யானையும் இல்லை: புதிய சின்னத்தில் வருகிறார் ரணில்’

T

The Leader Desk

ஏப்ரல் 10, 2024 • 4:52 AM

‘மொட்டும் இல்லை, யானையும் இல்லை: புதிய சின்னத்தில் வருகிறார் ரணில்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியிஸ்தருமான ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
  • அதேபோன்று, அவர் மொட்டுவின் கீழ் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள தமக்கும் பிரச்சினை உள்ளது.
  • அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், 80 சதவீதத்திற்கும் அதிகமான ஐக்கிய மக்கள் சக்தியினர் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியிஸ்தருமான ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராக பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவார் என, அவர் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

“ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில், அவர் உட்பட பலருக்கு பிரச்சினை இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் கூறியுள்ளனர்.

அதேபோன்று, அவர் மொட்டுவின் கீழ் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள தமக்கும் பிரச்சினை உள்ளது. எனவே, விக்ரமசிங்க புதிய சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், 80 சதவீதத்திற்கும் அதிகமான ஐக்கிய மக்கள் சக்தியினர் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள முன்வைத்துள்ள பிரேரணையை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்

அரசியலமைப்பின்படி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இரண்டையும் ஒரே நாளில் நடத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...