Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

'லீடர்' வாசகர்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!

T

The Leader Desk

ஏப்ரல் 10, 2024 • 3:33 AM

'லீடர்' வாசகர்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப்பிறை நாட்டின் சில பிரதேசங்களில் நேற்று மாலை தென்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டமையால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
  • புனித ஷவ்வால் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, ரமழான் மாதத்தின் 29ஆம் நாளான நேற்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறைக்குழு கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப்பிறை நாட்டின் சில பிரதேசங்களில் நேற்று மாலை தென்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டமையால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

புனித ஷவ்வால் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, ரமழான் மாதத்தின் 29ஆம் நாளான நேற்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறைக்குழு கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் ஒரு சில இடங்களில் பிறை தென்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பிறை காணப்பட்ட விடயத்தை உறுதிப்படுத்த சில மணித்தியாலங்கள் சென்ற நிலையில் மிக நீண்ட ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர் பிறைக் குழுவினால் ஏகமனதாக குறித்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பிறை தீர்மானிக்கும் இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உறுப்பினர்கள், பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், இலங்கை வக்பு சபை, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் பிறைக் குழு உறுப்பினர்கள், மேமன், ஹனபி பள்ளிவாசல் பிரதிநிதிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...