Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘ஜேவிபி மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாகவே சுமந்திரன் வந்தார்’

T

The Leader Desk

ஏப்ரல் 9, 2024 • 3:27 PM

‘ஜேவிபி மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாகவே சுமந்திரன் வந்தார்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எம்.ஏ.சுமந்திரனுக்கு தனிப்பட்ட அழைப்பை எமது கட்சி விடுக்கவில்லை” என, மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
  • இன்றையதினம் (09) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே இவ்வாறு பதிலளித்தார்.
  • வந்தவரை வரவேற்கும் பண்பின் அடிப்படையில் அவரை அழைத்தோம்.
எழுத்து அளவு:

எம்.ஏ.சுமந்திரனுக்கு தனிப்பட்ட அழைப்பை எமது கட்சி விடுக்கவில்லை” என, மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இன்றையதினம் (09) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாட்டுக்கு தமிழ் கட்சிகளுக்கான அழைப்பினை வழங்கினோம் அல்லாமல் தனிப்பட்ட அழைப்பு விடுக்கவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தனிப்பட்ட அழைப்பை எமது கட்சி வழங்கவில்லை தானாக மாநாட்டுக்கு வந்தார். வந்தவரை வரவேற்கும் பண்பின் அடிப்படையில் அவரை அழைத்தோம்.

ஆனால் வந்த சுமந்திரன் எமது கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் இந்தியாவைப் போல் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் நமது கட்சியின் தலைவருக்கு கூறியதாக செய்திகள் வெளி வந்ததாக அறிந்தோம்.

அத்துடன் சமஷ்டியைப் பற்றியோ தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பிலோ தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சம்பந்தன் மற்றும் சிறிதரனை விட நமது கட்சியின் தலைவர் அநுரவுக்கு நன்கு தெரியும்.

ஆகவே நாம் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். ஆனால் தனி நபர்களை அழைத்து அரசியல் செய்யும் நோக்கம் தமது கட்சிக்கு இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...