Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது’

T

The Leader Desk

ஏப்ரல் 9, 2024 • 3:23 PM

‘தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
  • இவ்வாறான சூழல்களும் இருப்பதாலே என்னுடைய தனிப்பட்ட கருத்து இது.
  • யாழ்.கல்வியங்காட்டிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எழுத்து அளவு:

முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்.கல்வியங்காட்டிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பது தொடர்பாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் சம்பந்தமாக எங்களுடைய கட்சி இன்னமும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரவில்லை. ஆனால், தனிப்பட்ட வகையில் என்னைப் பொறுத்தவரையில் இது எவ்வாறாயினும் நடைமுறைச் சாத்தியமாகாது. 

பொது வேட்பாளரைத் தேடிப் பிடிப்பதற்குள்ளேயே முரண்பாடு பல வந்து சேரும். ஏற்கனவே நிலைமைகள் அப்படித்தான் இருக்கின்றன. ஆகவே, தனிப்பட்ட வகையில் என்னுடைய கருத்து என்னவெனில் பேரம் பேச வேண்டிய சூழ்நிலைக்கு ஒற்றுமையாகப் பலமாக நாங்கள் இருக்க வேண்டும். அந்தப் பலத்தோடு நாங்கள் பேரம் பேசலாம்.

ஆனால், ஒரு பொது வேட்பாளர் என்றால் ஏனைய வேட்பாளர்களோடு நாங்கள் சமநிலையில் நிற்கின்றபோது சில சமயங்களில் எங்களது பேரம் பேசும் பலம் குறைவாக இருக்கலாம். அல்லது அவர்கள் எங்களோடு பேரம் பேசாமலும் போகலாம்.

இவ்வாறான சூழல்களும் இருப்பதாலே என்னுடைய தனிப்பட்ட கருத்து இது. ஒரு பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதிலேயே முடங்கி விடும். அல்லது சாத்தியமற்றதாக அமையும். அது பிரதேச வாதங்களுக்கு இடங்கொடுக்கக் கூடிய வாய்ப்பாகவும் அமையும். எனவே, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் வேட்பாளரைத் தெரிவு செய்வதிலேயே முடங்கி விடும். அல்லது சாத்தியமற்றதாக அமையும்.

பொது வேட்பாளர் தெரிவில் பொது வேட்பாளர் எந்தக் கட்சி என்ற விடயத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே, அனைத்து விடயங்களையும் பார்க்கின்றபோது இது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.  ஆனாலும், கட்சி இனிக் கலந்து பேசி முடிவுக்கு வரலாம். அதன் பிறகு அதனோடு நாங்கள் உடன்படுவதா? இல்லையா? என்பதையும் தீர்மானிக்கலாம்"  என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...