Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘மொட்டுக் கட்சி சார்பில் மிகச் சிறந்த வேட்பாளர் களமிறங்குவார்’

T

The Leader Desk

ஏப்ரல் 8, 2024 • 5:00 AM

‘மொட்டுக் கட்சி சார்பில் மிகச் சிறந்த வேட்பாளர் களமிறங்குவார்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைவரான முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
  • தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டணிகள் ஸ்தாபிக்கப்படுவது இயல்பானதே.
  • அநுராதபுரத்தில் நேற்று மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

தலைவரான முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

கேள்வி:- உங்களின் தாய்க் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. உங்களின் அரசியல் அந்தக் கட்சியில் இருந்தே ஆரம்பமானது. ஆகவே, கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. பிரச்சினைகளுக்குப் பேச்சுகள் ஊடாக வெகுவிரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.

கேள்வி:- உங்களின் பங்காளிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளார்களே... அது உங்களுக்குச் சவாலாக அமையாதா?

பதில்:- சவால் ஏதுமில்லை. தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டணிகள் ஸ்தாபிக்கப்படுவது இயல்பானதே.

கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாரே?

பதில்:- அது அவரது நிலைப்பாடு. நாங்கள் எமது கட்சியின் வேட்பாளரை அறிவிப்போம். கட்சியின் நிறைவேற்று சபை ஊடாக சிறந்த தீர்மானத்தை எடுப்போம். மிகச் சிறந்த வேட்பாளரைக் களமிறக்குவோம்.

கேள்வி:- நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப் போகின்றீர்களா?

பதில்:- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் உள்ளது.

கேள்வி:- புத்தாண்டு தொடர்பில் மக்களுக்கு ஏதேனும் குறிப்பிட விரும்புகின்றீர்களா?

பதில்:- அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மகிழ்வுடன் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...