Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாக்க ஜனாதிபதியினால் குழு நியமிப்பு

T

The Leader Desk

ஏப்ரல் 7, 2024 • 3:20 PM

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாக்க ஜனாதிபதியினால் குழு நியமிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
  • கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (07) காலை கண்டி பாரம்பரிய நடன கலைஞர்களைச் சந்தித்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
  • மலைநாட்டு நடனக்கலை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபல்யமடைந்துள்ள போதிலும் பாரம்பரிய மரபுகளை பின்பற்றாமை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, புதிய குழு அதனை ஆராய்ந்து பொருத்தமான முறையைத் தயாரிப்பதற்கு ஆலோசனை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நியமிக்கப்படும் இந்தக் குழுவில் கண்டி பாரம்பரிய நடனக் கலைஞர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மலைநாட்டு கலை மையமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (07) காலை கண்டி பாரம்பரிய நடன கலைஞர்களைச் சந்தித்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கண்டியின் பாரம்பரிய நடனக் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆராயுமாறும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆலோசனை வழங்கினார்.

மலைநாட்டு நடனக்கலை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபல்யமடைந்துள்ள போதிலும் பாரம்பரிய மரபுகளை பின்பற்றாமை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, புதிய குழு அதனை ஆராய்ந்து பொருத்தமான முறையைத் தயாரிப்பதற்கு ஆலோசனை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

கண்டி பாரம்பரிய நடனக் கலைஞர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, சப்ரகமுவ நடனம் போன்ற இந்நாட்டின் பாரம்பரியக் கலைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி அனைத்து மக்களுக்கும் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கு கண்டி பாரம்பரிய நடனக் கலைஞர்கள் தமது பாராட்டைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...