Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இளம் உலகத் தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2024 • 3:40 AM

இளம் உலகத் தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இளம் உலகத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
  • இலங்கை வரலாற்றில் இளம் அரசியல்வாதியொருவருக்கு முதன்முதலில் கிடைகப்பெறும் இவ்விருதை பணிவுடன் ஏற்கின்றேன்.
  • இலங்கை அமைச்சர் ஒருவர் உலக இளம் உலக தலைவர் பதவிக்கு தெரிவுசெய்யப்படுகின்றமை இதுவே முதன்முறையாகும்.
எழுத்து அளவு:

இளம் உலகத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அமைச்சர் ஒருவர் உலக இளம் உலக தலைவர் பதவிக்கு தெரிவுசெய்யப்படுகின்றமை இதுவே முதன்முறையாகும்.

பொதுசேவையில் அவரது அர்ப்பணிப்பும், புதிய அணுகுமுறையிலான அவரது தலைமைத்துவமும் தேசிய அளவில் சிறந்த – நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இளம் உலக தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் கூறியுள்ளதாவது,

“உலக பொருளாதார மன்றத்தால், இளம் உலகளாவிய தலைவர் என எனக்கு கிடைக்கப்பெற்றுள்ள உயரிய அங்கீகாரத்தை எனது சொந்தங்களான மலையக உறவுகளிடம் சமர்ப்பிக்கின்றேன். இலங்கை வரலாற்றில் இளம் அரசியல்வாதியொருவருக்கு முதன்முதலில் கிடைகப்பெறும் இவ்விருதை பணிவுடன் ஏற்கின்றேன்.

“இது எனக்கான பாராட்டு மட்டும் அல்ல இளம் தலைவர்களுக்கும், இளைஞர்களுக்கும் முன்னோக்கி வரவேண்டும் என்ற உந்து சக்தியை ஊக்கத்தை வழங்கும் என நம்புகின்றேன்.

“எமது இளைஞர்களுக்கு சர்வதேச ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்கவும், வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் இந்த பதவி நிலையை பயன்படுத்துவேன். அர்த்தமுற்ற சமூக மாற்றத்துக்காகவும், உலகளாவிய முயற்சிகளுக்கும் என்னால் முடிந்த முழு முயற்சியையும் வழங்குவேன்.

“இந்த அங்கீகாரத்தை வழங்கிய உலக பொருளாதார மன்றத்திற்கும், எனது பயணத்துக்கு ஆதரவளித்த, உற்சாகமளித்த, நம்பிக்கையளித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...