Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சுதந்திரக் கட்சியின் முக்கிய கோப்புகள் மாயம்: மொட்டுக்குச் சென்றவர்கள் மீண்டும் இணைவு

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2024 • 3:28 AM

சுதந்திரக் கட்சியின் முக்கிய கோப்புகள் மாயம்: மொட்டுக்குச் சென்றவர்கள் மீண்டும் இணைவு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
  • நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுத்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஏப்ரல் 4ஆம் திகதி இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியது.
  • ஏப்ரல் 1ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டு, பின்னர் கட்சித் தலைமையகத்துக்கு வந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி கட்சித் தலைமையை விமர்சித்தனர்.
  • அங்கு கட்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் வருமாறும் அழைத்துள்ளனர்.
எழுத்து அளவு:

செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வழிநடத்த விடாமல் தடுப்பது மற்றும் அவரது பிரேரணையின் பேரில், கட்சியின் நிறைவேற்று சபையால், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கிய தீர்மானத்தைத் தடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொண்டு, கட்சியின் அதிகாரத்தைப் மீண்ம் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ள பொதுஜன ஐக்கிய பெரமுன அரசியல் கூட்டணியின் செயற்பாடுகள், சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் தலைமையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முன்னணியின் செயற்பாடுகளை மீண்டும் செயற்படுத்துவதற்கு, கடந்த காலங்களில் பல தரப்பினர் முயற்சித்த போதிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் தடையாகவே கருதப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக்கு எதிராக நீதிமன்றில் சவால் விடுத்து, அந்த தடையை நீக்குவதற்கான உத்தரவை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுத்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஏப்ரல் 4ஆம் திகதி இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியது.

மேலும், கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மஹிந்த அமரவீர, தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துமிந்த திஸாநாயக்க, பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட லசந்த அழகியவண்ண ஆகியோரை நீக்குவதற்கு எதிராக. ஏப்ரல் 1ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டு, பின்னர் கட்சித் தலைமையகத்துக்கு வந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி கட்சித் தலைமையை விமர்சித்தனர்.

கடந்த ஏப்ரல் 04ஆம் திகதியன்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கை தொடர்பான தீர்ப்பை பெற்றுக்கொண்ட மூவரும், கட்சித் தலைமையகத்திற்கு வந்து அங்கிருந்த ஊழியர்களை அழைத்து அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டு, மீண்டும் அதே பதவிகளில் பணியாற்ற ஆரம்பித்துள்ளனர். அங்கு கட்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் வருமாறும் அழைத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்க முடியாது. அவர், ஆலோசகர் பதவியை மாத்திரமே வகிக்க முடியும். இதன்படி, அரசியலமைப்புச் சூழலைப் பயன்படுத்தி, மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வழிநடத்துவதைத் தடுக்க நீதிமன்றத்திடம் உத்தரவைப் பெறுவதற்கு சந்திரிகா குமாரதுங்க தரப்பு வேலை செய்தது. இதன்படி ஐக்கிய மக்கள் முன்னணியை மீண்டும் வலுப்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய சூழ்நிலையில், பொதுஜன ஐக்கிய பெரமுனவின் செயலாளராகப் பதவி வகித்த லசந்த அழகியவண்ண, தொடர்ந்து செயலாளர் பதவிக்கு தகுதி பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியின் எதிர்கால செயற்பாடுகளை தலைமைத்துவ சபையின் ஊடாக ஒழுங்கமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அதனால், அநுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தக் கூட்டணியில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னணியில் இணையும் கட்சிகளின் தலைமைத்துவத்தை முன்னணியின் தலைமைத்துவ சபை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் குறித்த கட்சிக்கு ஐந்துக்கு மேற்பட்ட பாராளுமன்ற பதவிகள் இருந்தால், தலைவர் தவிர மேலும் ஒருவர் தலைமைத்துவ சபையில் அங்கத்தவராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சுதந்திரக் கட்சியின் முக்கிய கோப்புகள் மாயம்: மொட்டுக்குச் சென்றவர்கள் மீண்டும் இணைவு | Tamil Leader | We Lead the Nation