Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

பொன்னாவெளியில் டக்ளஸை விரட்டியடித்த மக்கள்

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2024 • 3:02 AM

பொன்னாவெளியில் டக்ளஸை விரட்டியடித்த மக்கள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொழிற்சாலையின் வளாகத்துக்கு நேற்று மதியம் ஆதரவாளர்கள் படைசூழ வந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, அந்த வளாகத்துக்குள் நுழைய விடாது கிராம மக்கள் ஓட ஓட விரட்டியடித்தனர்.
  • இருப்பினும் அமைச்சரும், அமைச்சருடைய ஆதரவாளர்களும் நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பொன்னாவெளி மக்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
  • இறுதியில் சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் அமைச்சரும் அவருடைய ஆதரவாளர்களும் அவ்விடத்தில் இருந்து பின்வாங்கினர்.
எழுத்து அளவு:

தொழிற்சாலையின் வளாகத்துக்கு நேற்று மதியம் ஆதரவாளர்கள் படைசூழ வந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, அந்த வளாகத்துக்குள் நுழைய விடாது கிராம மக்கள் ஓட ஓட விரட்டியடித்தனர்.

மக்களின் எதிர்ப்பையும் மீறி அமைச்சரும், 6 பஸ்களில் வந்த ஆதரவாளர்களும் சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்படவுள்ள வளாகம் மற்றும் சுண்ணக்கல் அகழ்விடத்துக்குள் நுழைய முற்பட்ட வேளையில் இரு தரப்பினருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பு மற்றும் தள்ளுமுள்ளும் இடம்பெற்றது.

இருப்பினும் அமைச்சரும், அமைச்சருடைய ஆதரவாளர்களும் நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பொன்னாவெளி மக்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் நின்ற ஜெயபுரம் மற்றும் முழங்காவில் பொலிஸார் அமைச்சருடைய ஆதரவாளர்களை அப்புறப்படுத்த முயற்சித்த போதிலும் அவர்கள் தொடர்ந்தும் மக்களுடைய தடையை உடைத்துக்கொண்டு சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்படவுள்ள வளாகத்துக்குள் நுழைய முற்பட்டமையால் பொலிஸாருக்கும், அமைச்சருடைய ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இறுதியில் சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் அமைச்சரும் அவருடைய ஆதரவாளர்களும் அவ்விடத்தில் இருந்து பின்வாங்கினர்.

பொன்னாவெளி கிராமத்தில் அமையவுள்ள சீமெந்துத் தொழிற்சாலை மற்றும் சுண்ணக்கல் அகழ்வு செயற்பாடு களைக் கண்டித்து நான்கு கிராம மக்கள் இணைந்து 277ஆவது நாளாகப் போராடி வரும் நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் போராட்டத்தை மலினப்படுத்த முற்பட்ட வேளை மக்கள் கொதிப்படைந்ததுடன் அமைச்சரை யும், அவரின் ஆதரவாளர்களையும் அங்கிருந்து ஓட ஓட விரட்டியடித்தனர்.

D_1.jpg

 

D_2.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...